முதல்வர், துணை முதல்வர் குறித்து தரம்தாழ்ந்து விமர்சனம்.. குருமூர்த்திக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர், துணைமுதல்வர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சித்தது கண்டனத்திற்குரியது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என டிவிட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு அரசு தரப்பில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Thirunavukarasar condemns Auditor Gurumoorthy for criticizing CM and DCM

ஆனாலும் அரசை தான் இப்படி விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல என மீண்டும் டிவிட்டிய குருமூர்த்தி எழுத்தாளராக தனது விமர்சனம் தொடரும் என்றார். இந்நிலையில் குருமூர்த்தியின் விமர்சனத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி இதுபோன்ற விமர்சனங்களை கூறுவது ஏற்புடையதல்ல என அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu congress Leader Thirunavukarasar condemns Auditor Gurumoorthy for criticizicing CM and DCM. Auditor Gurumoorthy criticized CM and DCM in his tweeter page.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற