For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரப்பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் | திமுக அமளி- வீடியோ

    சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சனையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

    TN assembly meet starts today

    இன்று துவங்கி உள்ள சட்டசபை கூட்டம் ஜூலை 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கியதும், முன்னாள் எம்.எல்.ஏக்கள் 7 பேர் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இன்னும் சில நிமிடத்தில் கேள்வி நேரம் நடைபெறும். அதன் பிறகு துறை வாரியான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.

    இன்றைய கூட்டத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறும். ஜூன் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamil Nadu assembly meet starts today and will continue till july 9th. Opposition parties have planned to create storm in the assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X