அடேங்கப்பா... தமிழகம் முழுவதும் பாஜக 1,000 பிரசார பொதுக் கூட்டங்கள்... திருச்சி மாதிரியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட்டை விளக்க 1,000 பிரசார பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து மிரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழர் விரோத போக்குகளால் மத்தியில் ஆளும் பாஜக மீது தமிழகம் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இதனால்தான் ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட மிக குறைவான வாக்குகளை பாஜக பெற நேரிட்டது.

இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆளுகிறோம் என மார்தட்டுகிறது பாஜக. ஆனால் தமிழகத்தில் பாஜக கொடி எட்டிப்பார்க்காத கிராமங்கள் ஏராளம். நகரங்களில் கூட விரல் விட்டு எண்ணும் வகையில்தான் பாஜக இருக்கிறது..

போட்டி கூட்டம்

போட்டி கூட்டம்

அண்மையில் திருச்சியில் திமுக நீட்டுக்கு எதிராக பிரமாண்ட கூட்டத்தை கூட்டியது. இதற்கு போட்டியாக நாங்களும் கூட்டத்தை கூட்டுகிறோம் என பாஜக களத்துக்கு இறங்கியது. கூட்டத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கையைவிட காலியாக இருந்த நாற்காலிகள் எண்ணிக்கைதான் மிக அதிகமாக இருந்தது. இதனால் பாஜக கேலிக்குள்ளானது.

1,000 பொதுக்கூட்டம்

1,000 பொதுக்கூட்டம்

இதுதான் தமிழகத்தில் பாஜகவின் கள யதார்த்தம். இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய பட்ஜெட்டை விளக்க 1,000 பிரசார பொதுக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்து திகைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடித்துவிட்ட தமிழிசை

அடித்துவிட்ட தமிழிசை

திருச்சியில் நடத்திய ஒரு கூட்டத்துக்கே ஆள் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போனது பாஜக. இதில் 1,000 பிரசார பொதுக்கூட்டங்கள் என அடித்துவிட்டிருக்கிறார் தமிழிசை.

அசராமல் பேசிய தமிழிசை

அசராமல் பேசிய தமிழிசை

1,000 பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை திரட்டுவது என்பது எத்தகைய பெரிய சவால் என்பதை நினைத்துக் கூட பார்க்காமல் அசர வைத்துவிட்டார் தமிழிசை. அனேகமாக 1,000 தெருமுனை பிரசார கூட்டங்களைத்தான் அப்படி பில்டப்பாக தமிழிசை கூறியிருப்பாரோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.

தெருமுனை கூட்டம் போதும் பாஜகவுக்கு

தெருமுனை கூட்டம் போதும் பாஜகவுக்கு

தெருமுனை கூட்டம் என்றால் 5 பேர் இருந்தாலே போதும்... அதுதான் பாஜகவுக்கு பாதுகாப்பானதாகவும் கவுரமானதாகவும் இருக்கும். திருச்சியைப் போல திருகுவலியையெல்லாம் பாஜக தமிழகத்தில் தாங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu BJP President Tamilisai Soundararajan said that they will hold 1,000 publice meetings in the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற