கோயில்களில் அன்னதான திட்டம் தொடரும்.. தமிழக அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயில்களில் அன்னதான திட்டம் தொடரும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் கிராம கோயில்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜெயகுமார் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அம்மா உணவகம், 100 யுனிட் இலவச மின்சாம் உள்ளிட்ட பலத்திட்டங்கள் தொடர்வதாகவே இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

TN Budget: Food system in temples will be continued

அதன்படி ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 கிராம கோயில்கள் புதுப்பிக்கப்படும் என்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Food system in temples will be continue said in Tamilnadu budget. 1000 village temples will be reconstructed.
Please Wait while comments are loading...