அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் 20% உயர்வு- அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 TN Cabinet gave consent to implement 7th Pay commission

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 7-ஆவது ஊதிய குழு பரிந்துரைகளை அக். 13-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 20 சதவீதம் வரை உயருகிறது.

இதுதொடர்பாக இன்று மாலை அரசாணை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Cabinet gives consent to implement the 7th pay commission as HC ordered to do so. Today evening Government will release GO regarding this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற