பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவி.. தமிழக முதல்வர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகம் முழுக்க பல்வேறு சம்பவங்கள் காரணமாக சென்ற வருடம் சில காவலர்கள் பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்தனர். இவ்வாறு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் முன்பே குறிப்பிட்டு இருந்தார்.

TN CM announces fund for late police's family

தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மரணம் அடைந்த காவலர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ''மேற்கண்ட பட்டியலில் இருக்கும் பல்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ''இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடுகிறேன். இது முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN CM Edappadi Palanisami announces fund for late police's family. 14 families will get fund amount of 3 lakhs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற