அதிமுகவில் அடுத்த யுத்தம் வருது- வாரியத் தலைவர்களை அறிவிக்கிறது தமிழக அரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்னுமொரு அதிமுக தர்மயுத்தமா?- வீடியோ

சென்னை: அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாத காரணத்தால் மோதல்கள், அணிகள் உதயமாதல் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை சமாளிக்கும் வகையில் வாரியத் தலைவர்களை அறிவிக்க இருக்கிறது தமிழக அரசு.

அதிமுக அணிகள் இணைந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மூத்த தலைவர்கள் 'ஆதாயம்' எதுவும் கிடைக்கவில்லை என விரக்தியில் இருக்கின்றனர். ஆட்சியிலும் கட்சியிலும் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.

கடித யுத்தம்

கடித யுத்தம்

இந்த புலம்பலின் முதல் கட்டமாகத்தான் மதுசூதனனின் மல்லுக்கட்டு கடிதமாம். இதனைத் தொடர்ந்து கடித யுத்தம் நடத்துவதற்கு ஓபிஎஸ் அணியின் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

ஓபிஎஸ் அணிக்கும்..

ஓபிஎஸ் அணிக்கும்..

இதை சமாளிக்கும் வகையில் வாரியத் தலைவர் பதவிகள் அறிவிக்கப்பட இருக்கிறதாம். ஓபிஎஸ் அணிக்கு ஒன்றிரண்டு வாரியத் தலைவர்களை ஒதுக்கும் முடிவில் இருக்கிறதாம் ஈபிஎஸ் டீம்.

யார் தலைமை?

யார் தலைமை?

இத்தகவலை தெரிந்து கொண்ட புலம்பல் தலைவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம். இணைப்புக்குப் பின்னர் ஓபிஎஸ் தங்களை விட்டு வெகுதொலைவு போய்விட்டதால் யார் தலைமையில் அணி திரள்வது என்பதும் இதில் முக்கிய விவாதமாம்.

புறக்கணித்த மேற்கு மாவட்டம்

புறக்கணித்த மேற்கு மாவட்டம்

அதேநேரத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்த தலைவர்கள் சிலர் கமுக்கமாக மேற்கு மாவட்ட லாபியுடன் இணைந்து வாரியம் பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் மேற்கு மாவட்ட லாபியோ இவர்களை கண்டுகொள்வதே இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that TamilNadu Govt will announce the board chairman post very soon.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற