For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்பாதையில் பாறை... சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Rail
சென்னை: ரயில்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்த காரணத்தால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் அனைத்தும் 2 மணிநேரம் தாமதமாக வந்து கொண்டு இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தன்ணீர் தேங்கி இருந்தது. திண்டுக்கல் அருகே பெருமாள்ப்பட்டி என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சுமார் 2மணி நேரம் போராடி பாறையை அகற்றினர் அதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பாண்டியன், முத்துநகர்,பொதிகை, ரயில்களும், 2 மணிநேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனைத் தொடர்ந்து வகுமரி, நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களும் 2 மணி நேரம் தாமதமாக வரும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மின் கம்பி அறுந்தது

இதேபோல் இன்று காலை எண்ணூர் ரயில் நிலையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையேயான மின் ரயில் சேவைகள் ஒன்றரை மணி நேரமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஹதராபாத்-சென்னை சார்மினார் விரைவு ரயில் கும்மிடிப்பூண்டியிலும், டெல்லி-சென்னை தமிழ்நாடு விரைவு ரயில் பொன்னேரியிலும், டெல்லி-சென்னை ஜிடி ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை நிறுத்தத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

English summary
Twenty trains were today delayed at Egmore and Central railway station Due to heavy rain and electric cable fault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X