காதலியை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மகன் ஆசிக் மீராவுக்கு 30 ஆண்டு சிறை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் தெரசம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசிக் மீரா, மாநகராட்சி முன்னாள் துணை மேயர். அதிமுகவை சேர்ந்த, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகனாவார்.

Trichy Ex-corp deputy mayor gets 30year RI in rape case

அதே பகுதியைச் சேர்ந்த துர்கேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்பது ஆசிக் மீராவின் மீதான புகார்.

ஆசிக் மீரா மிரட்டி கருவை கலைக்க வைத்துள்ளார். ஆனாலும் அவரை ஆசிக் மீரா திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆசிக் மீரா மூலம் மீண்டும் கர்ப்பமான துர்கேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஏமாற்றிய ஆசிக் மீரா மீது புகார் அளித்தார் துர்கேஸ்வரி. இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி ஜெசிந்தா பாண்டியன் நேற்று தீர்ப்பளித்தார்.

இதில் ஆசிக் மீராவுக்கு கருவை சிதைத்த குற்றத்துக்கு 10 ஆண்டு, ஏமாற்றிய குற்றத்துக்கு 1 ஆண்டு, பலாத்கார குற்றத்துக்கு 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றத்துக்கு 2 ஆண்டு, மோசடி திருமணம் குற்றத்துக்கு 7 ஆண்டு என 5 சட்டப் பிரிவுகளிலும் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.50,000 அபராதமும் விதித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A mahila court here on Friday sentenced former deputy mayor of Trichy Corporation Mariam Ashik Meera to 30 years rigorous imprisonment for raping a woman.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற