லஞ்சம் கொடுத்த வழக்கு.. எந்த நேரத்திலும் தினகரன் கைது செய்யப்படலாம்? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் சின்னமான இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்கு இடைத் தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்தநேரத்திலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக்கப்பட்டார். ஆனால், அவரைக் கட்டாயப்படுத்தி அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டாத அவர் சசிகலா தரப்பினர் மீது குற்றம்சாட்டினார். அதையடுத்து அதிமுக, சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டு அணியாகப் பிரிந்தது.

TTV Dinakaran may be arrested at any time by delhi crime police

ஆர்கே நகரில் இடைதேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க இருந்தது. அப்போது இரட்டை இலை யாருக்கு என்று எழுந்த பிரச்சனையால் அது முடக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்கே நகரில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற புகாரையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தப்பட்ட்டது. அந்தப் புகாரையடுத்து, தற்போது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் தினகரன் இரட்டை இலையை மீட்பதற்கு இடைத் தரகர்கள் மூலம் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றப் பிரிவு போலீசார் தழிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர், டெல்லியைச் சேர்ந்த சதீஷ் சந்திரா ஆகியோரை விசாரித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi crime police filed a case against TTV dibakaran. Under this case he may be arrested at any time.
Please Wait while comments are loading...