Breaking News: விடுதலையானார் சோபியா.. பல ஆயிரம் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி: ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை போலீசாரின் காவலில் இருந்து வெளியே வந்தார் மாணவி சோபியா. அவரை பல ஆயிரம் பேர் திரண்டு வந்து வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திற்குள் வைத்து, பாஜக தலைவர் தமிழிசையிடம், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என மாணவி சோபியா என்பவர் கோஷமிட்டதாக தமிழிசை கொடுத்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தூத்துக்குடி கோர்ட்டில் இன்று சோபியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு வெளியேறினார் சோபியா. அவரை வரவேற்க பல ஆயிரம் பேர் திரண்டு விட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டபடி சோபியாவை வரவேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சோபியா வீடு திரும்பினார்
சோபியாவை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்
பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அத்தனை பேரும் கோஷம் போட்டதால் பரபரப்பு
அனைத்து அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான்
சுதந்திர பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்
அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்- கமல் கேள்வி
சோபியா கைது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின்
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு உள்ளது - ஸ்டாலின்
ஜாமீன் கிடைத்த நிலையில் மாலை வெளியே வருகிறார்
சோபியாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்புள்ளது
தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திலும் புகார் அளிப்போம்
சோபியாவுக்கு அறிவுரை கூறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்
நிபந்தனை ஏதும் விதிக்காமல் ஜாமீன் வழங்கியது கோர்ட்

சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் பேட்டி
விமானத்துக்குள்ளேயே சோபியா பாஜக ஒழிக என்று கூறினார்
விமான நிலையத்தில் இறங்கியதும் என்னைப் பார்த்து முறைத்தார் - தமிழிசை
இப்படி பேசுவது சரியா என்று அவரிடம் நான் கேட்டேன் - தமிழிசை
நான் விமானத்திற்குள் நாகரீகம் கருதி பதில் அளிக்கவில்லை - தமிழிசை
மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி 12 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்
வட இந்திய ஊடகங்களும் சோபியா செய்திக்கு முன்னுரிமை
திருவாரூர் மாவட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் சோபியாவுக்கு ஆதரவாக முழக்கம்
வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!