For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம் உடல் அடக்கம்: தயார் நிலையில் தூத்துக்குடி ஹெலிபேட்.. எமர்ஜென்சி பயன்பாட்டுக்காக

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்க பிரதமர், மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளதால் தூத்துக்குடியில் ஹெலிபேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்குகள் இன்று காலை நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் பஙகேற்க உள்ளனர்.

இதையடுத்து முப்படை வீரர்கள் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில போலீசாரும் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்கள் வருகையை ஓட்டி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 100 கிமீ சுற்றளவில் இருக்கும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் ஹெலி பேடுகள் கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுளளன.

ராமேஸ்வரததுக்கு அருகே உள்ள விமான நிலையம் தூத்துக்குடிதான். எனவே அவசர நிலையை சமாளிக்க தூத்துக்குடி விமான நிலையம் தயார் நிலையில் உள்ளது. மேலும் தூத்துக்குடி அருகே உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் உளள ஹெலி பேடையும் அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ராமேஸவரத்துக்கு வரும் ஹெலிகாப்டர்கள் அங்கு இறங்க முடியத சூழ்நிலையில் தூத்துக்குடியில் தரையிறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம் என்பதால் தூததுக்குடி ஹெலிபேடில் பராமரிபபு தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அவசர சூழ்நிலையை சமாளிக்க தூத்துக்குடி ஹெலிபேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

English summary
Officials have kept Tuticorin helipad ready to meet any emergency during Abdul Kalam funerals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X