பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய ட்வின்ஸ் சகோதரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது.

twins gets same mark in 10th result

தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த இரட்டையர்களான ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் ஆகிய இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

இருவரும் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செண்டம் எடுத்துள்ளனர். அண்மையில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின்போது சேலம், எடப்பாடியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான கார்த்திகா, கீர்த்திகா 1,117 மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
twins gets same mark in 10th result in nellai district
Please Wait while comments are loading...