இயற்கையோடு நாம் 2017: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. சூழலியல் அறிஞர்கள் பங்கேற்கும் 2ம் நாள் கருத்தரங்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'காடு' சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற சூழலியல் கருத்தரங்கின் 2ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2ம் நாளாக இன்று சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சூழலியற் கருத்தரங்கு நேற்று தொடங்கி 2ம் நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும்..

நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும்..

இரண்டாம் நாள் கருத்தரங்கில் இன்று, நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சிபிஐ தேசிய செயற்குழு தலைவர் தலைவர் சி. மகேந்திரன், பேராசிரியர் கோ. ரகுபதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கரைக்கடலும் கடற்கரையும் தலைப்பில், எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின், சூழலியல் ஆய்வாளர் சரவணன், பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

பல்லுயிர் சூழல்

பல்லுயிர் சூழல்

மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர் சூழலும் என்ற தலைப்பின் கீழ் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு மற்றும் பூதத்தான் காணி, பேராசிரியர் இராமானுசம், சி.கே. அசோக் ஆகியோர் பேசுகின்றனர். இது தொடர்பான விவாதங்களும் நடைபெறுகின்றன.

உணவு திருவிழாவில் இன்று

உணவு திருவிழாவில் இன்று

இன்று உணவுத் திருவிழாவில் மணதக்காளி சூப், ஓலைப் பக்கோடா, தினை தொதல், மாதுளை - முளைக்கட்டிய கருப்பு உளுந்து கலவை, கீரை வடை, ராகி பாயாசம், சோள தோசை, புதினா - கொத்தமல்லி தொவையல், குதிரைவாலி பிரியாணி - வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடி, வரகு இட்லி - ஆவரம்பூ சாம்பார், குள்ளக்கார் பணியாரம், நிலக்கடலை சட்னி, தட்டைப் பயிர் கூட்டு, சாமை தயிர் சாதம் என உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளது.

மூலிகை விற்பனை

மூலிகை விற்பனை

சுமார் 70 வகையான மூலிகை செடிகள், அறிவார்ந்த புத்தகங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்போர் தங்களுக்கு தேவையான இயற்கைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2nd day Environment seminar at MGR Janaki Arts and Science College in Chennai.
Please Wait while comments are loading...