கும்பகோணத்தில் ரவுடி அட்டகாசம்.. மினிபஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு - சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி
பஸ்சை ஏன் மெதுவாக ஓட்டுகிறீர்கள் என்று கூறி மினி பஸ் டிரைவர் கண்டக்கரை ரவுடி ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: மினிபஸ்சில் ஏறிய ரவுடி ஒருவர் டிரைவரையும், கண்டக்டரையும் அரிவாளால் மிரட்டிய சம்பவம் கும்பகோணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மினி பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் வெட்டிய நபரை தேடி வருகின்றனர். காயமடைந்த மினி பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து தாராசுரம் அருகில் உள்ள எலுமிச்சங்காய் பாளையம் என்ற இடத்திற்கு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்தின் நடத்துனராக விக்னேஷ் என்பவரும் ஓட்டுனராக வசந்த் என்பவரும் பணியாற்றி வந்தனர். பேருந்தில் ஏறிய ஒரு நபர் தாராசுரம் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

பேருந்தில் அடாவடி
அந்த இடத்தில் பேருந்து நிற்காது என ஓட்டுனரும் நடத்துனரும் தெரிவித்துள்ளனர். ஏன் பேருந்து நிற்காது எனக் கூறி பேருந்தின் ஸ்டியரிங்கை மர்ம நபர் திருப்பியதுடன், பஸ் சாவியையும் பிடுங்கினார். பேருந்தின் ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு சாவியை பிடுங்கிய நபரை விரட்டினார்.

விரட்டிய டிரைவர்
ஓடிய மர்ம நபர் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்து பேருந்து எலுமிச்சங்காய் பாளையம் வருவதற்குள் பேருந்தை தடுத்து நிறுத்தி நண்பர்கள் கொண்டு வந்த அரிவாளால் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மர்ம நபர் வெட்டினார். இதில் ஓட்டுனருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு
அதிர்ஷ்டவசமாக அரிவாள் வெட்டில் இருந்து பஸ் டிரைவர் தப்பினாலும் மர்மநபர் கடுமையாக உதைத்ததால் நடத்துனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மர்மநபரை தேடும் போலீஸ்
பேருந்தில் சிசிடிவியில் பதிவான காட்சிகள் காட்சிகளை கொண்டு கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தார் அரிவாளால் வெட்டிதகராறில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். பொது மக்கள் முன்னிலையில் கையில் அரிவாளுடன் ஏறி அடாவாடி செய்த நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications