வந்தே மாதரம் கட்டாயம்… இந்திய பன்முகத்தன்மைக்கே எதிரானது.. திருமாவளவன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் கட்டாயமாக பாட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

வந்தே மாதரம் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், பள்ளி, கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறையும் அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒருமுறையும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Vande Mataram compulsory in schools, Thirumavalavan opposes

நீதிபதி முரளிதரனின் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்த உத்தரவு இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போதே, நாட்டின் தலைவர்களால் இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது வந்தே மாதரம் பாடல் என்று கூறி நிராகரிக்கப்பட்டு பின்னர், ஜன கன மன பாடல் தேசிய கீதமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK leader Thirumavalavan has opposed Vande Mataram compulsory in Schools.
Please Wait while comments are loading...