For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேப்டன் 64: சினிமா தொடங்கி அரசியல் வரை…. அசத்தும் விஜயகாந்த்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 64வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சினிமாவில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் களமிறங்கினார். உள்ளாட்சியில் தொடங்கி பாராளுமன்ற தேர்தல் வரை சந்தித்திருக்கிறார்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகாந்த் ஒன்மேன் ஆர்மியாக சட்டசபைக்குச் சென்றார். 2011ம் ஆம் ஆண்டு நடைபெடற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 இடங்களில் வென்று எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்துடன் சபையில் அமர்ந்தார்.

அதே நம்பிக்கையில்தான் 2016ம் ஆண்டு ஆளுங்காட்சியாக அமர்வோம் என்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார் விஜயகாந்த். 64வது பிறந்தநாள் காணும் விஜயகாந்திற்கு ஒன்இந்தியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு சினிமா தொடங்கி அரசியல் வரை விஜயகாந்த் பற்றி சில தகவல்களை வாசகர்களுக்கு வழங்குகிறது.

இன்னொரு தடவை சொல்லு

இன்னொரு தடவை சொல்லு

இனிக்கும் இளமை தொடங்கி விருத்தகிரி வரை 125 படங்களில் நடித்திருக்கிறார் விஜயகாந்த்.கோபம் இருக்கும் இடத்திலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்க... கோபக்கார இளைஞனாக விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி திரைப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

காக்கிச்சட்டையில் கலக்கல்

காக்கிச்சட்டையில் கலக்கல்

காக்கிச்சட்டையில் கன கச்சிதமாக பொருந்தும் நடிகர் விஜயகாந்த். கண்களில் தெறிக்கும் கோபம்... தீவிரவாதிகளை பிடிக்க கேப்டனைத் தவிர யாரும் இப்படி கன கட்சிதமாக திட்டமிட முடியாது என்பது அவரது ரசிகர்களின் கருத்து.

சிறந்த இந்திய குடிமகன்

சிறந்த இந்திய குடிமகன்

நடிகராக இருந்தபோது யாரும் செய்யாத அளவுக்கு பொது மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகள், ஏழை மாணவர்கள் படிப்புச் செலவு உன்று பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த் அவரது சேவையைப் பாராட்டி சிறந்த இந்திய குடிமகன் விருது வழங்கப்பட்டது. அரசியல்வாதியான பின்னரும் அவரது சேவை தொடருகிறது.

பிறந்தநாள் விருந்து

பிறந்தநாள் விருந்து

விஜயகாந்த் தன், 64வது பிறந்த நாளை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றே கொண்டாடினார். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இன்று மாநிலம் முழுவதும், பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கவும், ஒவ்வொரு இடத்திலும், 1,000 பேருக்கு விருந்து தரவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

குடும்பத்தோடு கொண்டாட்டம்

குடும்பத்தோடு கொண்டாட்டம்

அரசியல் தலைவராக இல்லாமல் ஒரு குடும்பத்தலைவராக விஜயகாந்த் தனது பிறந்தநாளினை மனைவி, மகன்கள் சகிதம் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இந்த படம் முகநூல் பக்கத்தில் வலம் வருகிறது.

நட்புக்கு மரியாதை

நட்புக்கு மரியாதை

மதுரையில் இருந்து தன்னுடன் வந்து தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட இப்ராஹிம் ராவுத்தரின் நட்புக்கு மரியாதை செலுத்தியவர் விஜயகாந்த்.

நடிக்கத் தெரியாத தலைவர்

நடிக்கத் தெரியாத தலைவர்

சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்த அரசியல்வாதி. மனதில் பட்டதை பட்டென பேசுவதால் இவரை வைத்து சமூக வலைத்தளங்களில் காமெடி செய்கின்றனர். கோபக்கார விஜயகாந்தின் வெகுளித்தனமாக குணம் தெரிந்த பின்னர் வலைஞர்களின் கிண்டல்கள் சற்றே ஓய்ந்திருக்கிறது.

முதல்வர் விஜயகாந்த்?

முதல்வர் விஜயகாந்த்?

நம்பிக்கைத்தான் வாழ்க்கை என்பார்கள். இன்றைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் சிலருக்கு முதல்வர் கனவு இருக்கிறது. 2016ல் தேமுதிக ஆட்சியமைக்கும் என்று கூறி வருகிறார் விஜயகாந்த். அடுத்த பிறந்தநாளை முதல்வராக கொண்டாடுவாரா? அல்லது எதிர்கட்சித்தலைவர் என்ற பதவியைத் தக்கவைக்கும் வகையில் வெற்றியை பெறுவாரா? என்பதே தேமுதிகவினரின் எதிர்பார்ப்பாகும்.

English summary
DMDK leader Vijayakanth celebrates his 64th birthday on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X