விழுப்புரம் - கள்ளக்குறிச்சி சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி 25 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கள்ளக்குறிச்சி சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 25 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து உள்ளது.

Villupuram Kallakurichi Highway Bus accident

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 25 பேர் படுகாயமடைந்து உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸுகள் மூலம் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Villupuram Kallakurichi Highway Bus accident . 25 passengers Injured and admitted in Kallakurichi Government Hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற