தாலி பற்றி சர்ச்சை விமர்சனம்... குஷ்பு படத்தை எரித்து விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்
நாகர்கோவில் : பெண்கள் தாலி அணிவது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உருவ படங்களை எரித்து விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ'பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு பெண்கள் அணியும் தாலி குறித்து விமர்சித்தார்.
அப்போது அவர் பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார் என்றும், எனவே பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவிலில் வடசேரி சந்திப்பில், குஷ்புவின் உருவ படங்களை எரித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications