For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைமிங் பாஸ்.. பிரியாணியை பாதுகாக்க "பாக்ஸர்கள்" தேவை.. "தொப்பி வாப்பா"வின் செம விளம்பரம்!

பிரியாணி கடைக்கு பாக்ஸர்கள் தேவை என்ற விளம்பரம் பேஸ்புக்கில் வைராலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரியாணி கடையின் புது விளம்பரம்- வீடியோ

    சென்னை: டைமிங் பாஸ் டைமிங்.. இந்த செய்தியை படித்து முடித்ததும் நீங்களும் இதையே சொல்வீர்கள்.

    நேற்று முன்தினம் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடைக்குள் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்தது. கடைக்காரர்களிடம் சாதாரணமாக தொடங்கிய பேச்சானது வாக்குவாதமாக மாறி, பின்பு அது கைகலப்பாக மாறி, அந்த தகராறு வீடியோ எடுக்கப்பட்டு, அது வைரலாகி... கடைசியில் பிரியாணி கடையே ரத்த வாடை அடித்தது. விசாரணையில் தாக்கியவர்கள் அனைவரும் திமுக நிர்வாகிகள் என தெரியவந்தது.

    இதம் தந்த ஸ்டாலின் பேச்சு

    இதம் தந்த ஸ்டாலின் பேச்சு

    இதையடுத்து இனி எந்த ஒரு திமுக தொண்டருக்கும் கட்சி பெயரை சொல்லி அடாவடி செய்ய தையரிமே வரக்கூடாது என்ற வகையில் ஸ்டாலின் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கையை அப்போதே எடுத்தார். அத்துடன், சம்பவம் நடந்த பிரியாணி கடைக்கு சென்ற ஸ்டாலின் காயமடைந்த ஊழியர்களிடம், "எனக்கு மனசு கேக்கல, அதான் நேரிலேயே வந்துட்டேன், மருத்துவ செலவுக்கு பணம் வேணும்னா சொல்லுங்கள்" என்று விசாரித்து விட்டு வந்தார். படுகாயங்களுடன் வலியுடன் துடித்து கொண்டிருந்தவர்களுக்கு ஸ்டாலினின் வருகையும், பேச்சும் இதம் தந்து காயங்களுக்கு மருந்தாகிபோனது.

    பேஸ்புக்கில் விளம்பரம்

    பேஸ்புக்கில் விளம்பரம்

    நிற்க.. இப்போது இந்த சம்பவத்தை சென்னையை சேர்ந்த ஒரு பிரியாணிக் கடை படு வாலகமாக தனது வியாபார உத்திக்கு பயன்படுத்தியுள்ளது. இந்த பாக்ஸிங் தாக்குதலை பின்புலமாக வைத்து "தொப்பி வாப்பா" என்ற பெயருள்ள ஹோட்டல் ஒரு விளம்பரத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளது.

    அண்டாவுக்கு ஆட்கள்

    அண்டாவுக்கு ஆட்கள்

    அதில், "சென்னையில் உள்ள பிரியாணி கடைக்கு, பாக்ஸிங் தெரிந்த சப்ளையர் தேவை" என்றும் "பிரியாணி அண்டாவை பாதுகாக்க ஹெல்பர்கள் தேவை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இல்லாமல் "திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் பிரியாணி சிறப்பாக செய்து தரப்படும்" என்று சொன்னதுடன், "பிரியாணி அண்டாவை பாதுகாக்க ஆட்கள் நிறுத்தப்படும்" என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.

    பயமா? கிண்டலா?

    பயமா? கிண்டலா?

    ஒரு வன்முறை சம்பவத்தைகூட தனது வருமானத்துக்காக மாற்றும் யோசனையை நினைத்து பெருமைப்படுவதா? அல்லது இதை வைத்து காசு பார்ப்பதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை. விருகம்பாக்கம் சம்பவத்தினால் மனம் கலங்கி பயம் காரணமாக இப்படி விளம்பரம் தந்துள்ளார்களா? அல்லது அந்த சம்பவத்தை கிண்டல் செய்வதற்காக இந்த விளம்பரம் தந்துள்ளார்களா என்பது "தொப்பி வாப்பா"க்கு மட்டுமே தெரியும்.

    என்னமோ போங்கப்பா!

    English summary
    Wanted Boxer: New advertisement of the Biriyani store
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X