மக்கள் நீதி மையம் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது- கமல்ஹாசன்
தமிழக தண்ணீர் பிரச்சனை, காய்கறிகளில் பூச்சு மருந்து தெளிப்பது, மக்களின் உணவுப் பழக்கம் மோசமானது என நிறைய விஷயங்கள் குறித்து கமல் திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திருச்சி: தமிழக தண்ணீர் பிரச்சனை, காய்கறிகளில் பூச்சு மருந்து தெளிப்பது, மக்களின் உணவுப் பழக்கம் மோசமானது என நிறைய விஷயங்கள் குறித்து கமல் திருச்சி மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார். மேலும் மக்களுக்கு மக்கள் நீதி மையம் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது என்று கமல்ஹாசன் பேசினார்.
திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதில் தமிழக தண்ணீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கமல் பேசினார்.

அதில் ''கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய நீரை பெற்றே ஆக வேண்டும்.மற்ற மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீரை பேச்சுவார்த்தை, தீர்வு காண்பது கடமை.தமிழகத்தில் பெய்யும் மழையை வீணாகாமல் சிறு சிறு அணைகளை கட்டுவோம், ஏரி தூர்வாருவோம்.சொட்டு நீர்பாசனம் போன்ற நவீன நீர்ப்பாசனத்தை செயல்படுத்த வேண்டும்.'' என்றார்.
மேலும் ''நில நல மருத்துவர்களை நியமிப்போம். பயிற்சி அளிக்கப்பட்ட நில ஆய்வாளர்கள் நியமனம் செய்வோம். காய்கறி, பழ வகைகளுக்கு உள்ளூர் அடையாளம் தர ஏற்பாடு. விஷக் கலப்பில்லாத உரங்களை உற்பத்தி செய்வோம்.'' என்றார்.
மேலும் ''விவசாயிகளை சிறு தொழில் அதிபர்களை போல உருவாக்குவோம். தமிழகத்தில் 55% பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் 30% பெண்கள் உடல் எடையால் அவதிபடுகின்றனர்.பெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்வோம். ஆண்களுக்கு டாஸ்மாக் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு சத்து மாத்திரைகள் தரப்படும்.'' என்றார்.
மேலும் ''ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால்தான் கல்வி நேர்மையாக இருக்கும். லஞ்சம் கொடுத்தால் பணி கிடைக்கும் நிலையில் ஆசிரியர்கள். பல கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்வோர் தேசத்துரோகிகள். துணைவேந்தர்களின் வியாபாரத்தை முடக்க பாடுபடுவோம்'' என நிறைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து பேசினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications