For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துக்கம் விசாரிக்க மட்டும்தானா செல்லூர் ராஜூவை சந்தித்தார் அழகிரி?

Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு

    சென்னை: அழகிரியும் செல்லூர் ராஜூவும் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் என்றால் நம் இல்லங்கள் களைகட்டுவதை போல் இடைத்தேர்தல் மற்றும் பொது தேர்தல் நடந்ததால் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் களைகட்ட தொடங்கிவிடுகின்றன. அனைத்து கட்சிகளும் வெற்றி என்ற ஒரு இலக்கை நோக்கி போட்டியிடுகின்றன.

    அதற்காக சிறிய கட்சிகளாக இருந்தாலும் தங்களுடன் கூட்டணி சேர்த்து கொள்கின்றன. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதுபோல் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி என்ற விவகாரங்கள் கொடி கட்டி பறக்கின்றன.

    உறவாடியது

    உறவாடியது

    இதில் ஒரு கட்சி தங்களது கூட்டணியை தாங்களே அறிவிப்பது. இன்னொன்று மற்றவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை அறிவிப்பது. இதில் அதிமுக இரண்டாவது வகையில் உள்ளது. ஆரம்பத்தில் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவுடன் ஒட்டி உறவாடியது அதிமுக.

    அணுகலாம்

    அணுகலாம்

    ஆனால் இன்றோ எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த வித கூட்டணியும் இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டனர். அதே வேளையில் எங்கள் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொள்வோர் கூட்டணிக்கு அணுகலாம் என்று கூறியுள்ளனர்.

    தம்பிதுரை விமர்சனம்

    தம்பிதுரை விமர்சனம்

    அதே சமயம் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே கூட்டணி ஏற்படவுள்ளது என்று கூறிய அதிமுக, அழகிரியை ஆதரித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதுவும் கருணாநிதி இறப்புக்கு பிறகு. அழகிரி பேரணியை இருட்டடிப்பு செய்தது திமுக என்று அதிமுக எம்பி தம்பிதுரை விமர்சனம் செய்தார்.

    துக்கம் விசாரிக்க

    துக்கம் விசாரிக்க

    செல்லூர் ராஜூவோ இன்னும் ஒரு படி மேலே போய் அழகிரி பேரணிக்கு என்னா கூட்டம் என்னா கூட்டம் என புகழ்ந்து தள்ளினார். இதை அழகிரியும் ஆமோதித்தார். மேலும் செல்லூர் ராஜூவை இன்று திடீரென சந்தித்தார் அழகிரி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் அவரது தாய் ஓச்சம்மாள் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்ததாக கூறினார்.

    கேள்வி

    கேள்வி

    செல்லூராரின் தாய் இறப்பதற்கு முன்பு எத்தனையோ பேர் அதிமுகவில் இறந்துள்ளனர். இவ்வளவு ஏன் ஜெயலலிதா மறைவின் போது அவருக்கு அழகிரி அஞ்சலி செலுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது ஏன் திடீர் அனுதாபம் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    அதிமுக வியூகம்

    அதிமுக வியூகம்

    இதை வைத்து பார்க்கும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. அதாவது அதிமுகவுக்கு திமுகதான் எதிரி என்றும் திமுகவுக்கு அழகிரிதான் எதிரி என்றும் கூறப்பட்டுவிட்டது. எனவே எதிரியின் நண்பனுடன் கைகோர்த்துக் கொண்டு திமுகவை வீழ்த்த அதிமுக வியூகம் வகுத்திருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

    English summary
    What is the reason behind Alagiri- Sellur Raju meeting? There is any alliance talks between the on behalf of ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X