ரஜினி நாளை அறிவிக்கப் போவது இதுதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை : ரஜினி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அறிவிக்க போகிறார் என்ற கருத்து பரவலாக உள்ளது.

  கடந்த 20 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்தன. அவருக்கும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

  இந்நிலையில கடந்த மே மாதம் அவர் ரசிகர்களை சந்தித்த போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தார். அதுபோல் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

  கட்சி பணிகளில் மும்முரம்

  கட்சி பணிகளில் மும்முரம்

  சுமார் 6 மாத காலமாக ரஜினி தான் தொடங்கவுள்ள கட்சிக்கு கொடி, சின்னம், பெயர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளான 26-ஆம் தேதி ரசிகர்களிடையே ரஜினி பேசியபோது, எனது அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார்.

  எதிர்பார்ப்பில் மக்கள்

  எதிர்பார்ப்பில் மக்கள்

  நாளை ரஜினி என்னதான் அறிவிக்க போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

  கட்சி ரெடி

  கட்சி ரெடி

  கட்சி ரெடியாகிவிட்டது. ஆனால் போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று மீண்டும் கூறலாம் என்ற கருத்துகளும் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் ஈயம் பூசியது மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்

  பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்

  இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் கனவு காணும்போது நிறைவேறாவிட்டால் வருத்தப்பட கூடாது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். இது சாதாரண அறிவுரையாகவே பார்க்கப்பட்டதாலும் சிலர் இதற்கும் புது அர்த்தம் கற்பிக்கின்றனர். எனவே ரஜினியின் "கொடி" பறக்குமா என்பது நாளை தான் தெரியவரும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth will announce his political movement tomorrow. What will be the announcement?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற