சென்னை : சர்வர் கோளாறு காரணமாக ஒரு மணி நேரமாக வாட்ஸ் அப் செயல்பாடு முடங்கியது. இதனை கிண்டலடிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிடப்படும் சில சுவாரஸ்ய கருத்துகள்.
வாட்ஸ் அப் சமூக வலைதளம் உலகம் முழுவதும் இன்று ஒரு மணி நேரம் தடை பட்டது. இதனால் பலரும் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வாட்ஸ் அப் பிரச்சினை குறித்து #whatsappdown என்ற ஹேஷ்டேக் கீழ் தகவல் பரிமாறப்பட்டதால் சில மணித்துளிகளிலேயே அந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டானது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் சர்வர் டவுன் ஆனதால் இந்த இடையூறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் 50 நிமிடங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும் அதற்குள்ளாகவே நம்முடைய நெட்டிசன்களை வாட்ஸ் அப் நிலவரம் குறித்து கலகல பதில்களை பதிவிட்டுள்ளனர்.
அடேய் வாட்ஸ்அப் சர்வர் ஒயர எலி கடிச்சிடுச்சாம். அதான் அந்த ஒயர மாத்திருக்காங்க. போங்கடா போய் பொழப்ப பாருங்கடா என்று கலாய்க்கிறார் இவர்.
அடேய் வாட்ஸ்அப் சர்வர் ஒயர எலி கடிச்சிடுச்சாம். அதான் அந்த ஒயர மாத்திருக்காங்க. போங்கடா போய் பொழப்ப பாருங்கடா.
— 💖I ❤ MY இளவரசி💖 (@RKB_rocking) November 3, 2017
பன்னி காய்ஸ் 😆😆😆😆
இன்டர்நெட் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் இல்லாத ஒரு நிலை வந்துவிட்டது. ஆனால் ஒரு மணி நேரம் வாட்ஸ் அப் தடைபட்டுபோனதற்கே பலர் பதறிவிட்டனர். இதனை குறிப்பிடும் விதமாக பதிவிடப்பட்டுள்ளது இந்த கருத்து. வாட்ஸ்அப் முடங்குன மாதிரி ஃபேஸ்புக் டுவிட்டரும் முடங்குனா நிம்மதியா இருக்கலாம்
வாட்ஸ்அப் முடங்குன மாதிரி ஃபேஸ்புக் டுவிட்டரும் முடங்குனா நிம்மதியா இருக்கலாம்😂😂😂
— sheik sikkanthar (@sheik_twitts) November 3, 2017
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!