''எங்கே போனது நமது வீரம்... எங்கே போனது நமது விவேகம்''.. தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் ஆவேசம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு பா.ம.க தலைவர் ஜி.கே மணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பா.ம.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை எப்படி சந்திக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் போட்டியிட 23 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று இருந்தால் அடுத்த ஆளுங்கட்சியாக கூட பாமக வந்து இருக்கும் என மக்கள் நினைத்து இருப்பார்கள் என்று கூறினார்.
ஆனால் நாம் எங்கோ தவறி விட்டோம். இனி தவற விடக்கூடாது. எங்கே போனது நமது வீரம்; எங்கே போனது நமது விவேகம்; எங்க போனது நமது உழைப்பு என்றும் தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றதை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அனுபவ பாத்தியம் உனக்கு இருந்தால் நிலத்துக்குச் சொந்தக்காரன் நான் கூறுகிறேன். குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற அனைவரும் வெளியேறுங்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
-
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications