தினகரன் சொன்னது வெற்று மிரட்டலா? எங்கே போனார்கள் ஸ்லீப்பர் செல்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எங்கே போனார்கள் டிடிவி ஸ்லீப்பர் செல்கள்?-வீடியோ

  சென்னை: தினகரன் அணியினர் அவ்வப்போது மிரட்டி வந்தபடி எடப்பாடி அணியில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்பது அம்பலமாகிவிட்டது.

  19 எம்எல்ஏக்கள்தான் தினகரனுடன் சென்ற நிலையில், தினகரனும், அவர் தரப்பை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனும், தங்களது ஸ்லீப்பர் செல்கள், எடப்பாடி அணியில் இருக்கிறார்கள், நேரம் வரும்போது வெளியே வருவார்கள் என மிரட்டும் தொனியில் கூறி வந்தனர்.

  இந்த நிலையில், இன்று எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் கூட்டிய பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் இணைய ஒப்புதல் வழங்கப்பட்டது.

  சசிகலா நியமனம் ரத்து

  சசிகலா நியமனம் ரத்து

  மேலும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என கூறப்பட்டது. அதேபோல துணை பொதுச்செயலாளர் தினகரன் பதவியும் பறிக்கப்படுவதாக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  ஸ்லீப்பர் செல் குரலே எழுப்பலையே

  ஸ்லீப்பர் செல் குரலே எழுப்பலையே

  ஆனால் ஸ்லீப்பர் செல் என யாருமே குரல் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் தினகரன் ஆதரவாளராக அறியப்படும் தளவாய் சுந்தரமும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

  சும்மானாச்சுக்குமா

  சும்மானாச்சுக்குமா

  இதன்மூலம் தினகரன் கூறிவந்த ஸ்லீப்பர் செல்கள் யாரும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஸ்லீப் செய்துவிட்டார்களா ஸ்லீப்பர் செல்கள் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.

  வரும்.. ஆனா வராது

  வரும்.. ஆனா வராது

  இருப்பினும் ஸ்லீப்பர் செல்கள் இப்போது பேச மாட்டார்கள். தக்க சமயம் வரும்போது குரல் எழுப்புவார்கள் என்று இன்னும் கூட தினகரன் தரப்பினர் கூறிக் கொண்டுதான் உள்ளனராம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Where the sleeper cell MLAs of Dinakaran gone when AIADMK generalcouncil passes resolution against them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற