For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதேன்? கி. வீரமணி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அரசுடைமை ஆக்கப்பட்ட பின்னரும் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதேன்? என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது எங்களின் கல்வித் தாய் வீடு! அந்தப் பல்கலைக் கழகம் இல்லை என்றால் தென்னாற்காடு மாவட்டத்தில் கல்விக் கழனி செழித்திருக்காது தங்களின் திரண்ட செல்வத்தை கோவில் குளங்களை உண்டாக்குவதற்குத்தான் நகரத்தார் பயன்படுத்தி வந்தனர். அதில் விலக்காக அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்தான் கல்விக் கண்ணைத் திறக்கும் ஓர் அரிய தொண்டில் ஈடுபட்டார் அரசர் முத்தையா செட்டியார் அவர்கள் அதனை மேலும் வளர்த்தார்.

why annamalai university charged Additional fee structure for MBBS courses - veeramani

அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதே!

2013 ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டு விட்டது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ரூ 200 கோடி மானியமும் வழங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தில் உள்ள அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் தனியார்ப் பல்கலைக் கழகமாக இருந்த போது எந்தத் தொகையோ அதுவேதான் தொடர்ந்து கொண்டுள்ளது. அரசு நடத்தும் பல்கலைக் கழகமாக மாறிய பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளபடியான கட்டணத்தைத்தானே வசூலிக்கவேண்டும். ஆனால் அங்கு நடப்பது என்ன?

அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டண விவரம்:

எம்.பி.பி.எஸ். மாண்வர்களுக்கு ரூ 5 லட்சத்து 54 ஆயிரம், பல் மருத்துவ மாணவர்களுக்கு ரூ 3 லட்சத்து 40 ஆயிரம், முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ 8 லட்சம்- முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ 9.8.லட்சம்

மற்ற அரசுக் கல்லூரிகளில் கட்டண விவரம்:

ஆனால், தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ 13,600
பல் மருத்துவப் படிப்புக்கு ரூ. 11,600, முதுநிலை டிப்ளோமாவுக்கு ரூ 31,125, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.42,025

அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணத்தையும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் ஓப்பிட்டுப் பார்த்தால், எத்தனை மடங்கு அதிகமாக அரசர் முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படுகிறது என்பது எளிதாகவே விளங்கும்.

ஏனிந்த இரட்டை அளவுகோல்/ இதனால் பாதிக்கப்படுவோர் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே!

தமிழக அரசு ஆவன செய்யட்டும்:

பிளஸ் டூ மதிபெண்கள் அடிப்படையில் இவ்வாண்டு கிராமப்புற இருபால் மாணவர்கள்கூட அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த அதிகக் கட்டணம் பெருஞ்சுமையல்லவா?

தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு மற்ற அரசு கல்லூரி கட்டணத்தையே அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
why annamalai university charged Additional fee structure for MBBS courses, Dravidar Kazhagam leader k.veeramani asked that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X