மு.க.ஸ்டாலின் வதந்தி பற்றி இத்தனை வருடங்கள் கழித்து பாத்திமா பாபு வாய் திறக்க காரணம் என்ன?
திடீரென, ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் பாத்திமா பாபு. ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடத்தியதாக பல வருடங்களாக உலவிக் கொண்டிருந்த வதந்திக்கு நடிகை பாத்திமா பாபு இப்போது விடையளித்துள்ளார்.
'1990ஸ் கிட்ஸ்கள்' தங்கள் வாழ்நாளில் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வதந்தி இது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டீக்கடை பேச்சுகளாகவும், பரிணாம வளர்ச்சி பெற்று, சமூக வலைத்தளங்களில் விமர்சன கணைகளாகவும் சுற்றி வந்த தகவல் அது.
இந்த வதந்தி திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி நெட்டிசன்களால் சமீபகாலமாக அதிகமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல் ஆயுதமாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான், மவுனம் கலைத்து பேசியுள்ளார் பாத்திமா பாபு.

இப்போது ஏன் பேசினார்?
பாத்திமா பாபு தனது இளமை காலங்களில் கூட இதுகுறித்து வெளிப்படையாக பேசாத நிலையில், சீரியல் நடிகையாக செட்டிலாகிவிட்ட சூழலில் ஏன் இப்போது இதுபற்றி பேசினார் என்பது பலரது மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது. 10 வருடங்களுக்கும் மேலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பாத்திமா பாபு. ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்து அவரின் நம்பிக்கைக்குரியவராக மாறியதால்தான், ஜெயா டிவியில் அவர் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்தார் என கூறப்படுவதுண்டு.

ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர்
ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக அவரது கட்சியில் இருப்பது, ஒரு 'பாதுகாப்புக்காகத்தான்' என்ற வதந்தியும் உலவியது. ஆனால், ஜெ. மறைவுக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. தர்ம யுத்தம் செய்வதாக அறிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக மாறிய சில நாட்களில், பாத்திமா பாபு அந்த அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால், ஜெயா டிவியில் அவர் பதவி வகிக்க முடியவில்லை. இதையடுத்து சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஓபிஎஸ் அணி
சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு செய்தி வாசிக்க சொல்வது ஏற்புடையதாக இல்லை என்று பாத்திமா பாபு தெரிவித்திருந்தார். பன்னீர்செல்வம் அணி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும் அங்குதான் இருந்தார். இப்போது பன்னீர்செல்வம் அணியில் இருந்தாலும், ஸ்டார் பேச்சாளரான அவர் இப்போதெல்லாம் கருத்து கூறுவதே இல்லை. பன்னீர்செல்வம் அணியில் இருப்போருக்கு உரிய பதவிகள் கிடைக்கவில்லை என்பதும் பாத்திமா பாபு விலகி இருக்க காரணமாக கூறப்படுகிறது.

நற்பெயருக்கு களங்கம்
இந்த நிலையில்தான், திடீரென, ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் பாத்திமா பாபு. ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பாத்திமா பாபு வட்டாரத்தில் கேட்டபோது, "சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பாத்திமா பாபு-ஸ்டாலின் பற்றிய விவாதங்களை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பதால், பாத்திமா பாபு அதிருப்தியில் இருந்ததாகவும், எனவே உண்மையை சொல்ல தீர்மானித்தார்" என்கிறார்கள். குறிப்பாக கரூரில் திமுக நிர்வாகி சக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய விவகாரம் வெளியான பிறகு, பாத்திமா பாபு தொடர்பான மீம்கள் அதிகம் வெளியாகின. இதனால் 'சம்மந்தப்பட்டவர்கள்' தரப்பு உண்மையை சொல்லுமாறு பாத்திமா பாபு தரப்பை அணுகியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வேறு சில வட்டாரங்களோ, பாத்திமா பாபு திமுகவுக்கு இடம் பெயர காய் நகர்த்தி வருவதாக கண் சிமிட்டுகிறார்கள். இதற்கெல்லாம் விடை இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
-
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications