கமல் சார், பரணியை ஏன் மறுபடியும் சேர்க்கலைன்னு கேட்கலை.. சேர்த்திருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்த பரணி தப்பிக்க முயற்சித்தது ஏன் என்ற நியாயமான காரணத்தை கூறியும் அவருக்கு மறு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று நிகழ்ச்சியை பார்ப்போர் குமுறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற பரணி அந்த வீட்டை விட்டு தப்பிக்க முயற்சித்தார். இதனால் விதிகளை மீறியதாக அவர் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த எலிமினேஷனில் ஆர்த்தி வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சித்ததற்கான காரணம் குறித்து பரணியிடம் கேட்டார் கமல்.

 எல்லாம் பயம்

எல்லாம் பயம்

அப்போது பரணி கூறுகையில், அங்கிருந்தவர்கள் என்னை போட்டியாளராக பார்த்தார்களே தவிர சக மனுஷனாக பார்க்க தவறிவிட்டனர். பிக்பாஸ் வீட்டில் தலைவர் சொல்வதை கேட்பதா அல்லது தலைவர் ஆக நினைப்பவர் சொல்வதை கேட்பதா என்ற குழப்பதால் எனக்கு யாரை பார்த்தாலும் பயம்.

 கேமராவை காட்டிலும் மிரட்டல்

கேமராவை காட்டிலும் மிரட்டல்

30 கேமராக்கள் என்னை சுற்றி இருந்தபோதும் எனக்கு பயமில்லை. ஏனெனில் அதை விட மிரட்டும் ஆள்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது கேமரா எனக்கு பயமாக தெரியவில்லை. ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தோஷப்படுவேன். நான் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அங்கிருந்த போட்டியாளர்கள் கூறினர்.

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பரணி செருப்பால் அடித்தாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகமாட்டான் என்று காயத்ரி ரகுராம் கூறினார். நான் என்ன அவ்வளவு கேவலமானவரா. நான் இருந்தால் வீட்டில் சாப்பிட மாட்டேன், டாஸ்க் செய்ய மாட்டேன் என்று போர்க் கொடி தூக்கும் போது நான் என்ன செய்வேன். அதுதான் தப்பிக்க முயற்சித்தேன் என்றார். நடிகர் பரணியின் சுவாரஸ்யமான பதில்களை கமலே ரசித்தார் கை தட்டினார்.

Bigg Boss Tamil is banned? Petition Filed against Vijay TV-Oneindia Tamil
 சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

தாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தும் விதமாக சேரி பிஹேவியர் என்று காயத்ரி கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வலுத்தபோதும் கமல்ஹாசன் அவரை கண்டிக்கவில்லை. நிகழ்ச்சிக்கே மூடுவிழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுக்க காரணமாக இருந்த காயத்ரியை கமல் வெளியேற்றியிருக்கலாம்.

 ஆணவ பேச்சு

ஆணவ பேச்சு

கோடிக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சியில் தர லோக்கலாக செருப்பால் அடிப்பேன் கூற காயத்ரியை ஒரு வார்த்தை கூட கமல் கண்டிக்காதது நிகழ்ச்சியை பார்ப்போரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி, பொறாமை எதுவும் இல்லாமல் பெருந்தன்மை குண்ம் கொண்ட பரணியை கஞ்சா கருப்பு கேவலப்படுத்தினார். அதையும் கமல் கண்டிக்கவில்லை.

 மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

மக்களின் ஆதரவு பெற்ற, நியாயமான காரணங்களுக்காக வெளியேறிய பரணிக்கு பிக்பாஸ் விதிகளை ஏன் தளர்த்தவில்லை என்று கேட்கவில்லை. ஆனால் அவருக்கு ரீ என்ட்ரீ கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் பரமகுடிக்காரர், தன் சொந்த ஊர்காரரான பரணிக்கு விதிகளை தளர்த்தியிருக்கலாமே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Very Impressive speech given by Bharani to Kamalhassan on yesterday Bigg boss program. If Kamal gives a chance to reentry for Bharani, it will be good.
Please Wait while comments are loading...