For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழி, ம. நடராஜனை முன்வைத்து பழனி மாணிக்கம் சஸ்பென்ட்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்த பழனிமாணிக்கத்தை அக்கட்சி தலைமை சஸ்பென்ட் செய்தது தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுகவில் களையெடுப்பு தீவிரமானது. ஒரே நேரத்தில் 33 திமுக நிர்வாகிகள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

அத்துடன் ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சஸ்பென்ட் பட்டியல் வெளியான உடனே சென்னை வந்தார் தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்த பழனிமாணிக்கம்.

கருணாநிதியுடன் சந்திப்பு

கருணாநிதியுடன் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தமது தரப்பு விளக்கத்தை பழனிமாணிக்கம் முன்வைத்திருக்கிறார். தஞ்சை தொகுதிக்கு டி.ஆர். பாலுவை வேட்பாளராக அறிவித்த போது தமது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்த போதும் அனைவரையும் அரவணைத்து தாம் தேர்தல் பணியாற்றியதாக பழனிமாணிக்கம் விளக்கம் அளித்திருக்கிறார்.

என்ன காரணங்கள்?

என்ன காரணங்கள்?

இதை கருணாநிதி ஏற்றாரா? இல்லையா என்பது ஒருபுறம் இருக்க பழனிமாணிக்கம் குறிவைக்கப்பட காரணமே கனிமொழி மற்றும் ம. நடராசன் ஆகியோருடனான நெருக்கம்தான் என்று கூறப்படுகிறது.

அன்று ஸ்டாலின் ஆதரவு

அன்று ஸ்டாலின் ஆதரவு

பழனிமாணிக்கத்தைப் பொறுத்தவரையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளராகத்தான் இருந்தார். டி.ஆர். பாலுவா? பழனிமாணிக்கமா? என்றால் பழனி மாணிக்கத்தைத்தான் ஸ்டாலின் ஆதரிப்பார் என்று கூறப்பட்டது.

கனிமொழி பக்கம்

கனிமொழி பக்கம்

ஆனால் தஞ்சாவூர் தொகுதிக்கு டி.ஆர். பாலு மல்லுகட்டத் தொடங்கிய போது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழனிமாணிக்கம் வேறுவழியில்லாமல் கனிமொழி பக்கம் தாவ நேரிட்டது. அவர் கனிமொழி மூலம் மயிலாடுதுறை தொகுதியை வாங்கிவிட முயற்சித்தார். அதுவும் நடைபெறவில்லை.

சசிகலா நடராஜன்

சசிகலா நடராஜன்

இதுதான் ஸ்டாலினுக்கான முதல் கோபம் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்து பழனிமாணிக்கம் சகோதரர் மகளுக்கு சசிகலா நடராஜனின் வீட்டில் திருமணம் செய்து வைத்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த திருமணத்தை கூட நடராஜன் நடத்தி வைத்ததும் அதன் பின்னரே கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள் என்பதும் ஸ்டாலின் கோபத்துக்கு கூடுதல் காரணமாக சொல்லப்படுகிறது.

சஸ்பென்ட் பின்னணி இதுவே

சஸ்பென்ட் பின்னணி இதுவே

இந்த இரண்டு காரணங்களால்தான் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் என்றெல்லாம் கூட பார்க்காமல் பழனிமாணிக்கத்தை ஹிட் லிஸ்டில் சேர்த்தார் ஸ்டாலின் என்கின்றன அறிவாலய தகவல்கள்.

English summary
Former Thanjavur District Secretary of DMK and a former Union Minister Pazhani Manikkam jumb to the Kanimozhi camp was one of the main reason for his suspension from the party, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X