For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் இந்த கணக்கு.. வராவிட்டால் இன்னொரு கணக்கு!

|

சென்னை: தமிழக பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள், அவர்களுக்கு எத்தனை சீட் என்ற ஒரு தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. ஒரு வேளை தேமுதிக, பாஜக கூட்டணிக்கு வந்தால், பாஜகவை விட தேமுதிகவுக்கே அதிக சீட் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அப்படி நடந்தால் அதை பாஜக கூட்டணி என்று சொல்ல முடியாது. மாறாக, தேமுதிக தலைமையிலான கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி தேமுதிக சேராவிட்டால், பாஜக 16 இடங்களில் போட்டியிடலாமாம்.

இந்தக் கூட்டணியில் தேமுதிக, பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும்தான் டபுள் டிஜிட்டில் சீட் கிடைக்கும் என்று தெரிகிறது. மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் சீட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மதிமுக

முதலில் மதிமுக

பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை முதலில் வந்த கட்சி மதிமுகதான். டெல்லி வரை போய் வைகோ பேசி முதலில் கூட்டணியை உறுதி செய்து விட்டார்.

இழுத்தடித்து வந்த பாமக

இழுத்தடித்து வந்த பாமக

இதைத் தொடர்ந்து பாமக நீண்ட நாட்களாக இழுத்தடித்துக் கொண்டே வந்தது. தற்போது அதுவும் சேர்ந்துள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சி -கொங்கு நாடு கட்சி

இந்திய ஜனநாயகக் கட்சி -கொங்கு நாடு கட்சி

இதேபோல இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகளான இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகியவையும் இணைந்துள்ளன.

தேமுதிகவும்

தேமுதிகவும்

இக்கூட்டணியில் தேமுதிகவும் இணைவதாக தெரிகிறது. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக பாஜக வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் அந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்ற விவரமும் வெளி வந்துள்ளது.

சரி, யாருக்கு எத்தனை சீட்...

சரி, யாருக்கு எத்தனை சீட்...

இதில் தேமுதிக தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாலும் அதிக சீட் தந்தால் தான் வருவார்கள் என்பதாலும் தேமுதிகவுக்கு 12 சீட் தரப்படலாம் என்று தெரிகிறது.

பாஜகவுக்கு 11 தான்

பாஜகவுக்கு 11 தான்

அதேசமயம், பாஜக 11 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

பாமகவுக்கு 8 சீட்

பாமகவுக்கு 8 சீட்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 8 சீட் தரப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

மதிமுகவுக்கு 6

மதிமுகவுக்கு 6

முதலில் கூட்டணியில் சேர்ந்த மதிமுகவுக்கு 6 சீட்கள்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதை வைகோ ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், வேட்பாளர்களும் ரெடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றவர்களுக்கு ஆளுக்கு 1

மற்றவர்களுக்கு ஆளுக்கு 1

இந்திய ஜனநாயகக் கட்சிக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் தலா ஒரு சீட் கிடைக்குமாம். ஆக மொத்தம் 39 சீட்டுகளும் காலி.

இன்னொரு கணக்கு

இன்னொரு கணக்கு

அதேசமயம், இன்னொரு செய்தியும் உலா வருகிறது. அதாவது தேமுதிக 15 சீட்கள் கேட்கிறதாம். அதேபோல பாமக 9 சீட் கேட்கிறதாம். அப்படிக் கொடுத்தால் மதிமுகவுக்கு 8 சீட்தான் கிடைக்கும் என்கிறார்கள். பாஜகவும் 7 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்றும் சொல்கிறார்கள்.

ஒரு வேளை தேமுதிக வராட்டி...

ஒரு வேளை தேமுதிக வராட்டி...

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால், பாஜக 15 இடங்களில் போட்டியிடலாமாம். பாமகவுக்கு 12 இடங்கள் கிடைக்கலாமாம். மதிமுகவுக்கு 10 சீட் கிடைக்கலாம். மற்ற இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் கிடைக்கும்.

உளுந்தூர்ப்பேட்டை முடியட்டும்.. பார்க்கலாம்

உளுந்தூர்ப்பேட்டை முடியட்டும்.. பார்க்கலாம்

வரும் பிப்ரவரி 2ம் தேதி உளுந்தூர்ப்பேட்டை தேமுதிக மாநாடு முடிந்தால்தான் இதில் எந்தக் கணக்கு இறுதியாகும் என்பது தெரியவரும்.

English summary
Various sources say that DMDK will be allotted 12 seats in BJP alliance for LS election. And BJP may end with 11 seats, one lesser than the DMDK. MDMK may get 6, pmk 8 and IJP, KNMK will get a seat each.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X