For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: இனி கனமழை இல்லை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்குவாக்கில் அரபிக் கடலை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இனி கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த 1ம் தேதி கனமழை பெய்தது. அந்த மழையில் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்து சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது.

Worst is over for Tamil Nadu: MeT dept.

இந்நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி அரபிக் கடல் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இனி தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு நாள் கனமழை கொட்டித் தீர்த்தால் அதை தாங்கும் நிலையில் சென்னை, கடலார் இல்லை. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

English summary
Meteorological department told that trough of low pressure is moving westward towards Arabian sea which is a sign that worst is over for Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X