For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு வேலைக்கு ஆசை- ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் 9.40 லட்ச ரூபாய் ஏமாந்த வாலிபர்!

Google Oneindia Tamil News

அரக்கோணம்: அரக்கோணத்தில் வெளிநாட்டு வேலைக்காக ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் ஆன் - லைனின் 9.40 லட்சம் அளித்து ஏமாந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜெகன். டிப்ளமோ படித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பி இணையதளம் மூலம் வேலை தேடிவந்தார்.

மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம்:

அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவருக்கு ஆன்-லைனில் விண்ணப்பம அனுப்பியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஜெகன் ஆன்-லைனில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தார்.

9.40 லட்ச ரூபாய் டெபாசிட்:

அதை பெற்றுக் கொண்ட நிறுவனம் ரூபாய் 9.40 லட்சத்தை வங்கியில் செலுத்தினால் வேலைக்கு உத்தரவு வரும் என்று தெரிவித்துள்ளது.

நம்பி செலுத்திய வாலிபர்:

அதை நம்பி 4 தவணைகளில் ஜெகன் தக்கோலத்தில் உள்ள வங்கி கிளையில் ரூபாய் 9.40 லட்சம் செலுத்தியுள்ளார்.

வேலை உத்தரவு கிடைக்கவில்லை:

ஆனால் அதனைத் தொடர்ந்து பலமுறை முயன்ற போதும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு வேலை உத்தரவும் வழங்கவில்லை.

நிறுவனம் குறித்து விசாரணை:

இதுகுறித்து ஜெகன் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற போலீஸார் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆஸ்திரேலிய நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Man cheated by an Australian company. He applied for a job in Australian company and deposited 9.40 lakhs. Police filed case through cyber crime and investigating about that company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X