For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் பலி

சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கிண்டி காவல் நிலையம் எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாதி மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தண்ணீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று இளைஞர் ஒருவருக்கு தண்ணீர் லாரி எமனாகியுள்ளது. கிண்டி காவல் நிலையம் எதிரிலேயே இளைஞர் ஒருவர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youth killed water tanker lorry accident Chennai

கடந்த ஆண்டு கிண்டியில் செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகிய மாணவிகள் உயிரிழந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொழிச்சலூர் சம்பந்தனார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் , 29. அவரது மனைவி பிரீத்தி 24 , 2 வயது குழந்தை ரியா, தாய் சரோஜா 65, ஆகியோர் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தனர்.

குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் லாரிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்காக இயக்கப்படும் அரசு வாரிய லாரிகள், தனியார் லாரிகள் என இரண்டாயிரம் லாரிகள் வரையில் சென்னையில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

English summary
A youth killed in a water tanker lorry accident near Guindy in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X