குத்துனதே நண்பன் தான்! கொலையை தற்கொலையாக்க போட்ட நாடகம்! ஆனால்.. காரணமே வேறயாம்! மலைத்த மயிலாடுதுறை!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு திடீர் திருப்பமாக , அவர் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துக் கொள்ளாததால் பள்ளி மாணவன் ஒருவனுடன் இணைந்து கொலை செய்யப்பட்டதாக முக்கிய குற்றவாளி திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகன் ராஜ்குமார் . கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பகுதியில் மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தி கொலை செய்யப்பட்டு ராஜ்குமார் பிணமாக கிடந்தார்.

இளைஞர் கொலை
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் மயிலாடுதுறை ரயில்வே போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என மயிலாடுதுறை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பொய்க் காரணம்
விசாரணையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கிடைத்த தகவல்படி போலீசார் சித்தர்காட்டை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன் மற்றும் மகாதானபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவா்களிடம் நடத்திய விசாரணையில் கபிலன் மற்றும் சிறுவன் மீது மின்கம்பிகளை திருடியதாக ராஜ்குமார் பழி சுமத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து 2 பேரும் சோ்ந்து ராஜ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அவரை அழைத்து சென்று அடித்துக் கொன்றதாகக் கூறினர்.

காரணமே வேறு
ஆனால் உண்மையில் கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே தனிப்படை போலீசார் கொலையாளிகளை விசாரித்த போது, அவர்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தது. கொலையாளி கபிலன் மற்றும் பள்ளி மாணவன் இருவரும் இணைந்து ரயில்வே லைன் பகுதியில் ராஜ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு மறுத்துவிட்டு ராஜ்குமார் தப்பி ஓடியுள்ளனர்.

தற்கொலையாக்க நாடகம்
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலால் ராஜ்குமாரை மண்டையில் தாக்கியும் காயம் அடைந்து கீழே விழுந்தவரை கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க பிணத்தை தண்டவாளத்தின் நடுவே போட்டுள்ளனர். மெலிதான உருவம் என்பதால் தண்டவாளத்தில் நடுவே கிடந்த உடல் ரயில்களில் அடிபட்டு சிதையாமல் கிடந்துள்ளது. இதனால் கொலையை தற்கொலையாக்கும் நாடகம் நடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications