தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நம்பரில் இத்தனை லாரியா? உரிக்க உரிக்க ’ஸ்டிக்கர்’ மேல் ‘ஸ்டிக்கர்’! திணறிப் போன தஞ்சை போலீஸ்..!

Google Oneindia Tamil News

தஞ்சை : தஞ்சை மாவட்டம் மருவூர் மணல் குவாரியில் ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை கொண்டு அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் அடித்து நூற்றுக்கணக்கான லாரிகளில் ஒட்டி மணல் கொள்ளை கும்பலை விரட்டி பிடித்த வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் மருவூர் மணல் குவாரியில் கோவை, சென்னை, திருப்பூர், தேனி என பல மாவட்டத்தில் இருந்து வந்து லாரிகளில் மணல் எடுத்து செல்கின்றனர்.

Sand theft by driving several lorries in a single registration number in Tanjore

மணல் அள்ள ஆன் லைன் மூலம் பர்மிட் அவசியம் என்ற நிலையில் உரிய பர்மிட் இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதாக வந்த தொடர் புகாரை அடுத்து காவல்துறையினர் மருவூர் மணல் குவாரியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து கொண்டு போலியாக ஸ்டிக்கர் அடித்து பல லாரிகளுக்கு பர்மிட் எடுக்கப்பட்ட லாரி எண்ணை ஒட்டி மணல் கொள்ளை நடந்து வருவதை கண்டறிந்தனர். காவல்துறையினரின் சோதனையை கண்டு லாரிகளை அங்கு இருந்து எடுத்து செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி லாரிகளில் இருந்து போலி ஸ்டிக்கரை பிரித்து எடுத்தனர்.

இதனை காவல்துறையினர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தான் இதை செய்துவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து கொண்டு போலியாக ஸ்டிக்கர் அடித்து பல லாரிகளில் மணல் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police have released a video of a sand robbery gang chasing hundreds of lorries with a fake number sticker on the same number with a permit taken from a lorry number at the Maruvur sand quarry in Tanjore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X