எதிர்கட்சினா சொந்த கால்ல நிக்கனும்! அவங்களா செல்லாது செல்லாது! மிஸ்டு கால் கட்சி..கீ வீரமணி கிண்டல்!
தேனி : தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட வேண்டும், மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி பேசியுள்ளார்.
Recommended Video
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாலும், திமுக அரசு மற்றும் தமிழகத்தில், மற்ற மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

திக கீ வீரமணி
மத்திய பாஜக அரசை கண்டித்தும் , தமிழகத்தின் உரிமைகள் குறித்தும், திராவிட கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநில உரிமைகள்
இந்த கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப் பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி என்றும், மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.

சொந்த கால் கட்சிகள்
அவர்கள் எப்பொழுதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும் எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது, சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும் மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது

பெரியார் சிந்தனை
சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுதான் திராவிட மாடல் ஆட்சி என பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக , மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications