கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு
நெல்லை : கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க கூடாது என்றும். மக்கள் வாழ தகுதியற்ற பாலைவனப்பகுதிகளிலோ அல்லது பயன்பாடற்ற கோலார் தங்க சுரங்கங்களிலோ சேமித்து வைக்க ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.
இதுகுறித்து நெல்லை மாவட்டம் பணகுடி அருகில். லெப்பைக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் மூலம் தல ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வேண்டாம்
3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பகுதியில் அணுக்கழிவுகளை சேமிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காரணம் இந்த பகுதியில் இருந்து 800 கிலோமீட்டர் தூரம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும்.

ரஷ்யா
இங்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகம் கேரளா மற்றும் தென் மாவட்ட பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த திட்டம் குறித்து ஒப்பந்தம் போடுகின்ற பொழுது அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார்.

மக்கள் எதிர்ப்பு
அணுக்கழிவுகளை இங்கு சேமிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் பணிகள் நடந்து வந்தது . மேலும் இங்கு சேமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் வரை சென்று மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்பதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக தெரிவித்துள்ளேன்.

சீனா ஆதிக்கம்
மத்திய அரசு அணுக்கழிவுகளை இங்கு சேமிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் . இலங்கை துறைமுகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மிக அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அணுக்கழிவு மையம் செயல்படுவது உகந்ததல்ல. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பகுதியான பாலைவனம் போன்ற பகுதிகளில் தான் பொக்ரான் வெடி குண்டு சோதனையை நடத்தினார்.

எங்கு சேமிக்கலாம்
இந்த மாதிரியான மக்கள் வாழ தகுதியற்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும் இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வரை மனு கொடுத்துள்ளேன். மத்திய அரசிடமும் இதனை கோரிக்கையாக வைத்துள்ளேன் .

அணு உலை
எனவே மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்திற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே இந்த பகுதியில் பலருக்கு புற்றுநோய் உள்ளது கூடங்குளம் அணுஉலையின் காரணமாகவே வந்ததாக கூறப்படுகிறது . ஆகவே அனுகழிவு சேமிப்பு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications