நள்ளிரவில் பகீர்! திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே பயங்கரம்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகிலேயே திமுக பிரமுகர் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகர 24 வது வார்டு திமுக செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அபே மணி நேற்று இரவு 11 மணி பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் மணியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராற்றில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு திமுகவிற்குள்ளே பலரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் துணை மேயர் வேட்பாளர் பதவி பெற அபே மணி மும்முரமாகச் செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications