Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. ஓமிக்ரான் ஓடிப்போயிரும்.. நம்மகிட்ட மருந்து இருக்கு! ஆய்வு தீவிரம்.. சொல்கிறார் பிச்சையா குமார்

ஓமிக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று, இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார். ஓமிக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிச்சையா குமார் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கடந்த 2 ஆண்டுகாலமாக கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் அலை வீசியதில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இப்போது ஓமிக்ரான் வைரஸ் உலகத்தின் பல நாடுகளில் வீரியமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் பரவினால் இந்தியாவில் தினசரி 15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் சித்த மருத்தவம் பல வைரஸ் நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. நிலவேம்பு குடிநீர், கபசுர கசாயம் போன்றவை கொரோனா காலத்தில் பலருக்கும் கை கொடுத்தது. ஓமிக்ரான் பரவல் அச்சம் எழுந்துள்ள இந்த நேரத்தில் கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார்.

சித்த மருத்துவ திருநாள்

சித்த மருத்துவ திருநாள்

இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சித்த மருந்துகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மருந்துகளின் கண்காட்சி அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது, சித்த மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் சித்த மூலிகை கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

நிலவேம்பு குடிநீர்

நிலவேம்பு குடிநீர்

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த மருந்து கண்காட்சி மற்றும் சித்த மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், சித்த மருத்துவ ஆர்வலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று, இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொற்று நோய்களுக்கு மருந்து

தொற்று நோய்களுக்கு மருந்து

தற்போதைய நிலையில் சித்த மருத்துவ நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும், நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமே சித்த மருந்து என்ற நிலை மாறி நீரழிவு நோய் , தொற்று நோய்களுக்கும் சித்த மருந்துகளில் நல்ல பலன் கிடைப்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருந்துகளில் கவனம்

மருந்துகளில் கவனம்

கொரோனா காலத்திற்கு பின் சித்த மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இன்றைய நிலவரப்படி, 408 சித்த மருத்துவ நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை அல்லாத இடங்களில் சித்த மருந்துகளைப் பெற்று பொதுமக்கள் உபயோகிக்கும் போது மருந்து தயாரிப்பதற்கான உரிமம், மருந்துக்கான சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பின்னர் பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பூரண குணமடைந்த நோயாளிகள்

பூரண குணமடைந்த நோயாளிகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வது அலையில் சித்த மருத்துவமனை மூலம் 69 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது, சுமார் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் அடைந்தார்கள். இவர்களுக்கு சித்த மருந்து மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டு நோய்த் தன்மை குறைக்கப்பட்டு பூரண நலம் பெற செய்யப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% மட்டுமே சிக்கலான நிலைக்கு நோயாளிகள் சென்ற பரிந்துரை விகிதம் எனவும் பிச்சையா குமார் கூறினார்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    ஓமிக்ரானுக்கு கபசுர குடிநீர்

    ஓமிக்ரானுக்கு கபசுர குடிநீர்

    மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை பரவாமல் தடுக்கும் மருந்தாக கபசுர குடிநீர் வழங்கபட்டு வருகிறது. ஒமிக்ரான் நோய்க்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. கபசுரக் குடிநீர் நல்ல மருந்தாக செயல்படும் சர்வதேச அளவில் கபசுரக் குடிநீருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிச்சையா குமார் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+