நாங்குநேரி இரட்டைக் கொலை.. “வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை” மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!
நெல்லை: நாங்குநேரி இரட்டைக் கொலை விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்துவில் கடந்த திங்கட்கிழமை அன்று 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்களை அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் மாற்றுத்திறனாளியான ஜான் மற்றும் வட மாநில தொழிலாளர் டிரானத் கட்டா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாகவும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று இரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் நாங்குநேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான புலன் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிரிவினையைத் தூண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் கருத்துகள் பகிர்ந்த நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி காவல் நிலையங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் செய்த நபர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் விஷமத்தனமான மற்றும் பிரச்சனைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications