எட்டி பார்த்தால் தாமிரபரணி ஆறு.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை! கொதித்து எழுந்த நெல்லை மக்கள் போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில், முறையாக குடிதண்ணீர் வரவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 2 இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மக்கள் கடும் ஆவேசமாக போராட்டம் நடத்தியதால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

5 நாட்களாக தண்ணீர் இல்லை
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் முத்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாமிரபரணி பக்கத்தில் தண்ணீர் இல்லை
எனினும் குடிதண்ணீர் வழங்கப்படாத நிலை இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தங்களுக்கு கூட முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையே என்று மக்கள் ஆத்திரமடைந்தனர். எனவே இன்று காலை மேலப்பாளையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பிரதான சாலையில், பொது மக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் போராட்டம்
குறிப்பாக, முத்தமிழ் நகர் பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மாரியம்மன் கோவில் தெரு பகுதி மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்
குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால், உணவுகளை சமைப்பதற்கும் குடி தண்ணீருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, முறையான குடிநீர் விநியோகம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு மாற்று பாதைகள் வழியாக வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்தனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications