பொதுமக்கள் இடையூறு செய்வதா?.. எல்லாத்தையும் முதல்ல எடுங்க.. கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அவர் கட்சியினரிடம் கோபமடைந்தார்.
ஆங்காங்கே அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைப்பதால் விபத்துகள் ஏற்பட்டு விபத்து நேரிடுவதும் பேனர் விழுந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால் பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.

திருவள்ளூர் மாவட்டம்
இதன் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை வரவேற்கும் விதமாக மாதவரம் ரவுண்டானா, புழல், காவாங்கரை, செங்குன்றம், வடகரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான திமுக நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.

பேனர்கள்
பேண்டு வாத்திய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சாலையில் ஆங்காங்கே பேனர்கள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு இருந்தன. அதிகளவில் திரண்டிருந்த தொண்டர்களால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, ஜிஎன்டி சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
காலையில் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பேனர் வைத்த தகவல் கிடைத்தது. இதனால் அவர் கோபமடைந்தார். ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு வரும் போது அரசியல் விழா போல வரவேற்பு அளிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் மூலம் அவசர அவசரமாக சாலையில் மக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

கோபம்
இந்த கோபத்தில் வரவேற்க காத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எதையும் பேசாமல், கையசைக்காமல் முதல்வர் ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றார். இதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் வேதனை அடைந்தனர். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications