பழைய டாடா சுமோ காரை வாசலில் நிறுத்தி.. திருவள்ளூரில் உயிரை பறித்தவருக்கு ஆயுள் தந்த பொன்னேரி கோர்ட்
சென்னை: புழலில் வீட்டின் அருகே கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை நீதிமன்றம் விடுத்திருக்கிறது.. என்ன நடந்தது திருவள்ளூர் மாவட்டத்தில்?
கடந்த 2022-ல் நடந்த சம்பவம் இதுவாகும்.. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த பரதராமர் (61) என்பவர் சென்னை புழல் பகுதியில் உள்ள சிவராஜ் சாலையில் இடம் வாங்கி வீடுகட்டி குடியேறினார். சென்னையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அத்துடன் சொந்தமாக ஒரு காரையும் பரதராமன் வாங்கியிருக்கிறார்.

கார் வாங்கின பொறாமை
ஆனால், இவர் வாங்கியது, வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குமரனுக்கு பிடிக்கவில்லை.. பரதராமர் புதிதாக கார் வாங்கி அதை குமரன் வீட்டுக்கும் தனது வீட்டுக்கும் நடுவே உள்ள 10 அடி வழியில் நிறுத்தி வந்துள்ளார்.
இதை பார்த்ததுமே குமரனுக்கு இன்னும் பொறாமையும், ஆத்திரமும் வந்தது.. இதனால் வேண்டுமென்றே பயன்படாத பழைய டாடா சுமோவை அந்த வழியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் குமரன். இதனால் பரதராமர் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் போயுள்ளது.
இதையடுத்து பரதராமர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் நேரில் வந்து குமரனிடம் சமாதானம் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.. இதனால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி குமரன் பரதமராரை தாக்கியிருக்கிறார்.
உருட்டுக்கட்டையால் போன உயிர்
பிறகு தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் பரதராமரை அவர்களது மகள்கள் முன்பே அடித்து தாக்கியுள்ளார்.. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் பரதராமன்..
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்களும், பொதுமக்களும் பரதராமரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், அடுத்த 2வது நாள், அதாவது பிப்ரவரி 4ம் தேதியே பரதராமன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
பொன்னேரி கோர்ட் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்திருந்த நிலையில், முதியவர் பரதராமர் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இந்தக் கொலை வழக்கில் குமரவேல், தாய்மாமன் அருணகிரி, உறவினர்கள் பழனி, கல்பனா, மலர், சங்கீதா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
2 பேருக்குமே ஆயுள் தண்டனை
விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்கில் குமரவேல், தாய்மாமன் அருணகிரி ஆகிய 2 பேருக்குமே ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினர்கள் பழனி, கல்பனா, மலர், சங்கீதா உள்ளிட்ட 4பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக கே.ஆர்.லாசர் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தந்தார். விசாரணை முடிவில், நீதிபதி சிவகுமார், குமரவேல், 43, மற்றும் அவரது உறவினர் அருணகிரி (64)க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, திருவள்ளூர் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications