திருவண்ணாமலையில் ஆட்டுத் தலையுடன் நடமாடும் மனித உருவம்! என்னாது 4 விரல் இருக்கா? தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், வித்தியாசமான உயிரினம் நடமாடுவதாக தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணையும் தாக்கிவிட்டதாம்.. மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று வேகமாக பரவி வரும் இந்த தகவல் திருவண்ணாமலை பகுதி மக்களை பீதி அடைய செய்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளது... இந்த காட்டுப்பகுதியில் ஏராளமான மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது.

இங்கு சிறுத்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.. பல்வேறு சமயங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகவும், அது தொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையத்திலும் அவ்வப்போது வெளியாகி பகீரை கிளப்பி விடும்.
மர்ம விலங்கு
ஆனால், தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு தாக்கியதில் ஆடுகள் ஏராளமாக இறக்கும் சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன.. ஆடுகள் மட்டுமல்லாமல், கன்று குட்டிகளை மர்ம விலங்கு தாக்கியிருக்கின்றன.. அந்தவகையில், திருவண்ணாமலை தண்டராம்பட்டு பகுதியில் சிறுத்தை மற்றும் மர்ம விலங்குகளின் நடமாட்டம் உள்ளது, அங்குள்ள மக்களை எந்நேரமும் கிலியில் ஆழ்த்தி சென்றுவிடும்.
இந்நிலையில், தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான விலங்கு உலவுவதாக பகீர் தகவல் பரவியது.. அந்த விலங்குக்கு 4 விரல்கள் உள்ளதாம்.. ஆட்டின் தலை இருக்கிறதாம்..
போட்டோக்கள் பரவின
அதுமட்டுமல்ல, அந்த மர்ம உயிரினம், காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கிவிட்டதாக கூறி, அது தொடர்பான சில போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகவேகமாக பரவின.... இதைப் பார்த்து மாவட்ட மக்கள் நடுங்கிவிட்டார்கள்.
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று பரவி வரும் இந்த இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
முற்றிலும் வதந்தி
"இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை 'ஆடு மனிதன்' என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது. இது 2011-ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதை பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த விளக்கமானது, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications