சாலையோரம் நின்ற மாணவிகள்! பட்டென்று காரை நிறுத்திய முதல்வர்! என்ன நடந்துச்சுனு நீங்களே பாருங்க..!
திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை பார்வையிடச் சென்ற முதல்வர் ஸ்டாலின், சாலையோரம் நின்ற பள்ளி மாணவ மாணவிகளை பார்த்து காரை நிறுத்தியதோடு, தேர்வில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை கூறி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்
தண்ணீர் வீணாகமல் இருக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மே மாதம் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் கல்லார் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை நெடுஞ்சாலைகள் கொத்தங்குடி பகுதியில் உள்ள கொத்தங்குடி வாய்க்கால் 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு உள்ளது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெல்டாவில் ஆய்வு
அதேபோல பேரளம் அருகே வீரா நத்தம் வாய்க்கால் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு உள்ளது இதனையும் தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் பொது மக்களை சந்தித்து மனுகளை பெற்று கொண்டார்.

மாணவர்களுக்கு வாழ்த்து
அதனைத் தொடர்ந்து மதிய உணவிற்காக திருவாரூர் சென்றார். அப்போது நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் எனுமிடத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒரு ஐந்து நிமிடம் உரையாடினார்.

ரோஜா பூ அளித்தார்
அப்போது அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறி ரோஜாப்பூக்களை மாணவ மாணவிகளிடம் பரிசாக வழங்கி சென்றார். பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்தி சென்ற இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications