மா கோலம் போட்ட ரோஜா..மகரசங்கராந்தி விழாவில் சுவாரஸ்யம்..சேவல் சண்டையும் விறுவிறு
திருப்பதி: மகர சங்கராந்தி விழாவை முன்னிட்டு ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா திருப்பதியில் நடைபெற்ற விழாவில் மா கோலம் போட்டு அசத்தினார். சேவல் சண்டையை உற்சாகமாக தொடங்கி வைத்தார். சூரியனின் மகர ராசி பிரவேசத்தை தான் மகர சங்கராந்தியாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் தை பொங்கல் போல ஆந்திராவில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆந்திராவில் ஆங்காங்கே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திருப்பதியில் உள்ள காவல்துறை மைதானத்தில் இன்றைய தினம் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.

சங்கராந்தி நிகழ்ச்சியில் திருப்பதி ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஜா மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விதவிதமாக போடப்பட்ட கோலங்களைப் பார்வையிட்ட அவர், சேவல் பந்தயம், கபடி போட்டி உள்ளிட்ட சங்கராந்தி சம்பிரதாய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். சேவல்கள் சண்டை போட்டதைப் பார்த்து உற்சாக குரல் எழுப்பினார் ரோஜா.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா, சங்கராந்தி பண்டிகை நமது வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருவிழா நாட்களில் கூட காவல்துறையினர் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்க முடியாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி, காவல்துறையினர் குடும்பங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் என்றார். காவல்துறையினரின் குடும்பங்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இது காட்டுகிறது என்றும் ரோஜா கூறினார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி மாலை போகி தேர், கொலு, சாமி வீதிஉலா, 15ஆம் தேதி காலை மகர சங்கராந்தி பண்டிகை, சங்கராந்தி திருமஞ்சனம், 16ஆம் தேதி கோதாதேவி பரிணய உற்சவம், அன்று நடக்க இருந்த பர்வேடு உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அன்று புண்டரிகவல்லி தாயார் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், மலர் மாலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications