அவினாசி டூ திருப்பூர்.. 7 பேரை தாக்கி.. 4 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்டது!
திருப்பூர்: திருப்பூர் அம்மாபாளையத்தில் பனியன் கம்பெனி குடோனில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்கு சென்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
Recommended Video
அவிநாசி அருகில் இருந்து தப்பித்த சிறுத்தை திருப்பூர் மாநகரில் நுழைந்து பனியன் கம்பெனி குடோன் ஒன்றில் 2 பேரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அது அந்த குடோனிலிருந்து தப்பியது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சோள காட்டில் பதுங்கியிருந்த அந்த சிறுத்தை அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் ஐந்து பேரைக் காயப்படுத்தியது.
இதையடுத்து நேற்று திருப்பூர் பொங்குபாளையம் அருகில் விவசாய நிலங்களும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பகுதியில் அந்த சிறுத்தை புகுந்து, நாய் ஒன்றை அடித்து சாப்பிட்டு விட்டு பாதி இறைச்சியை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது.

சிறுத்தை
வனத்துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் சிறுத்தை நேற்று இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலையும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அந்த சிறுத்தை திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள அம்மாபாளையம் எனும் இடத்தில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் உள்ள பனியன் கம்பெனி குடோன் ஒன்றுக்குள் புகுந்தது.

காயமடைந்து சிகிச்சை
அந்தப் பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை கடித்து குதறியது. மேலும் இந்த தகவல் கேள்விப்பட்டு சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு வந்த வேட்டை தடுப்பு காவலர் பிரேம் குமார் என்பவரையும் சிறுத்தை தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குவிந்த மக்கள்
இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனி குடோனில் வனத்துறையினர் மற்றும் போலீசார் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார்கள். இதில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பொதுமக்களை விரட்டி விட்டு பனியன் கம்பெனியில் கேட்டை பூட்டிவிட்டு உள்பக்கமாக தேடுதல் பணி நடந்து வருகிறது.

மயக்க மருந்து
சிறுத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருப்பதால் விரைவில் பிடித்துவிடலாம் என்று கருதப்படுகிறது. அதை மயக்க மருந்து கொடுத்து பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே சிறுத்தையை விரைந்து பிடிக்க முடியும் என போலீஸாரும் வனத்துறையினரும் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் பனியன் கம்பெனியின் குடோனுக்கு மேலும் சில கதவுகள் இருப்பதால் அந்த வழியாக சிறுத்தை தப்பிவிட்டது. எனவே திருப்பூர் நகர மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கவனமுடன் இருக்க மாவட்ட ஆட்சியரகம் அறிவுறுத்தியிருந்தார்.

குடியிருப்பு பகுதி
இந்த நிலையில் திருப்பூரில் ஊருக்குள் குடியிருப்பு பகுதிக்குள் சிக்கிய சிறுத்தை ஒரு வனப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், வனத்துறையினர், வனத்துறை மருத்துவர்கள் சிறுத்தையை புதரில் பார்த்தவுடன் மயக்க ஊசி செலுத்தினார்கள். இதையடுத்து அரை மயக்க நிலையில் ஒரு சிறிய இடைவெளியில் சிறுத்தை பதுங்கியது. பின்னர் முழுவதுமாக மயக்கமடைந்ததை அடுத்து அதை வலை போட்டு வனத்துறையினர் பிடித்தனர். அசைவின்றி கிடந்த சிறுத்தையை எடுத்துக் கொண்டு வரவழைக்கப்பட்ட கூண்டில் அடைத்தனர். இந்த சிறுத்தையை எந்த காட்டில் விடுவது என்பது குறித்து வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தலின்படி முடிவு எடுக்கப்படும். அவினாசியிலிருந்து திருப்பூர் வந்த சிறுத்தை 7 பேரை காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications