Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் கால் வைத்த எடப்பாடி பழனிசாமி.. திமுகவை சரமாரி குற்றஞ்சாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் இன்று திருப்பூரில் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவை பலப்படுத்தி திமுகவுக்கு எதிரான வலிமையான கட்சி தாங்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

Tiruppur Pollachi Jayaraman Edappadi Palanisamy

திருப்பூர் மாநகராட்சி

இதையடுத்து, திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறது.. அந்தவகையில், திருப்பூர் மாநகராட்சியை கண்டித்தும் இன்று போராட்டம் நடத்துகிறது.

ஏற்கனவே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தாங்கள்தான் நிறைவேற்றினோம். திருப்பூர் மாநகருக்கு 4ம் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது, திமுக என்ன செய்தது என்று கேள்விகளை எழுப்பி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று மீண்டும் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திருப்பூர் மாநகராட்சியில், அதிமுக ஆட்சியில் எம்சிசி எனப்படும் 25 நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் 3 உலர் கழிவு மீட்பு மையங்கள் நிறுவப்பட்டு, மாநகராட்க்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து செயல்பட்டுக் கொண்டிருந்த மையங்களை முற்றிலுமாக முடக்கி வைத்து, தற்போது ஒவ்வொரு வார்டிலும் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல், 'டாலர் சிட்டி' என்ற பெயர் மாறி 'குப்பை நகரம்' என்ற நகரமாக மாற்றி, சுகாதார சீர்கேட்டின் காரணமாக நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி

நிலைமை இவ்வாறு இருக்கையில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முன்தேதியிட்டு குப்பை வரியை 150 சதவீதம் உயர்த்தியதோடு, குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீட்டு உரிமையாளர்களுக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்;

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையிலும், முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி முன்னாள் எம்.பி., திருப்பூர் (வடக்கு) தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அன்பகம் திருப்பதி, திருப்பூர் மாநகராட்சி கொறடா எம்.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த. கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கண்டன குரல்கள்

இதையடுத்து, குமரன் சிலை அருகில் இன்று காலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. எஸ்ஐஆர் பணிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக செய்யவில்லை, திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது..

மேலும், திருப்பூர் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியான பாஜகவும் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+