திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சி சரகத்தில் பகீர்... எலி மருந்து சாப்பிட்டு 3 ஆண்டுகளில் 366 பேர் தற்கொலை- டிஐஜி பாலகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி சரகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் எலி மருந்து சாப்பிட்டு 366 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; தற்கொலைகளைத் தடுக்க சிறப்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் எலி மருந்து சாப்பிட்டு 2018-ல் 138 பேரும், 2019-ல் 165 பேரும், 2020 மே மாதம் வரை 63 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்கும் வகையில் திருச்சி சரகத்தில் சட்ட விரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் 228 கடைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலவரத்திற்கு காரணம்.. கபில் மிஸ்ராவின் பேச்சை குறிப்பிட்ட மார்க் சூக்கர்பெர்க்.. வெடித்தது சர்ச்சை!கலவரத்திற்கு காரணம்.. கபில் மிஸ்ராவின் பேச்சை குறிப்பிட்ட மார்க் சூக்கர்பெர்க்.. வெடித்தது சர்ச்சை!

தற்கொலை தடுப்பு ஆய்வாளர்கள்

தற்கொலை தடுப்பு ஆய்வாளர்கள்

இதில் திருச்சி மாவட்டத்தில் 160 கடைகளும், புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும். இதற்கிடையே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர் நல ஆய்வாளர்கள், தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் குழு எண்கள்

வாட்ஸ் அப் குழு எண்கள்

இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர். திருச்சிக்கு அஜீம் -94981 10803, புதுக்கோட்டைக்கு லட்சுமி - 94981 06582, கரூருக்கு கார்த்திகா - 94981 61860, பெரம்பலூருக்கு கார்த்திகாயினி - 94875 56866, அரியலூருக்கு சுமதி - 94981 10774 ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவின் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலீசாருக்கு தொடர்பு எண்கள்

போலீசாருக்கு தொடர்பு எண்கள்

கடைகளில் யாரேனும் எலி மருந்து வாங்கினால், கடைக்காரர்கள் உடனடியாக தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களுக்கோ அல்லது அவரால் நடத்தப்படும் குழுவுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க முடியாதபட்சத்தில் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகங்களை திருச்சிக்கு 0431-2333629, புதுக்கோட்டைக்கு 04322-255299, பெரம்பலூருக்கு 04328-224962, அரியலூருக்கு 04329-222106 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

என்ன நடவடிக்கை?

என்ன நடவடிக்கை?

அதைத் தொடர்ந்து தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார், எலி மருந்து வாங்கிச் சென்றவர்களைத் தொடர்புகொண்டு, காரணத்தை அறிந்து, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவி செய்வர். இவ்வாறு டிஐஜி பாலகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

English summary
Trichy Police said that 366 Rat poison suicide cases in Last 3 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X